For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் மோசடி: துரை தயாநிதியின் பாஸ்போர்ட் முடக்கப்படவில்லை- மு.க.அழகிரி

By Chakra
Google Oneindia Tamil News

Azhagiri and Durai Dayanidhi
சென்னை: கிரானைட் கற்களை சட்ட விரோதமாக வெட்டி விற்ற முறைகேட்டில் சுரங்க நிறுவன உரிமையாளராக இருந்த மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கவில்லை என்று அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், துரை தயாநிதி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடையும் வரை அவரைக் கைது செய்யக் கூடாது என்றும் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அழகிரி கூறியுள்ளார்.

கிரானைட் கொள்ளை தொடர்பாக துரை தயாநிதிக்கு போலீஸார் தீவிர வலை வீசியுள்ளனர். ஆனால், அவர் தலைமறைவாக உள்ளார். துரை தயாநிதி வேறு நாட்டிற்குத் தப்பிச் செல்லாவண்ணம் குடியேற்ற அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் போலீஸார் கோரியுள்ளனர்.

இந் நிலையில் துரை தயாநிதியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. இதை அழகிரி மறுத்துள்ளார்.

பிஆர்பி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை:

இந் நிலையில் கைது செய்யப்பட்ட பிஆர்பி கிரானைட் அதிபர் பழனிச்சாமியின் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் மேலூர் அருகே தெற்குத் தெரு அலுவலகத்தின் கீழ் உள்ள சுரங்க அறையில் கட்டுக் கட்டாக பணம் இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

English summary
Madurai police have registered cases against Olympus Granites, besides a few other companies that were found to be illegally mining the stones from the outskirts of Madurai city. Of these, Olympus Granites is said to be owned by one S Nagaraj in partnership with Union minister M K Azhagiri's son Durai Dayanidhi. Now, Azhagiri disputes claims that his son's passport is frozen
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X