For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லேப் டாப்பை உலகிற்கு அறிமுகப்படுத்திய பில் மாக்ரிட்ஜ் மறைவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Bill Moggridge
நியூயார்க்: லேப்டாப்பை உருவாக்கி உலகிற்கு அளித்த பில் மாக்ரிட்ஜ் சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 69. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போதும் நோயின் தீவிரம் காரணமாக மரணமடைந்தார்.

பிரிட்டனைச் சேர்ந்த பில் மாக்ரிட்ஜ் லண்டனில் உள்ள சென்ட்ரல் ஸ்கூல் ஆப் டிசைனில் பட்டப் படிப்பை முடித்தார். தலைசிறந்த கணினி வடிவமைப்பாளராக விளங்கிய மாக்ரிட்ஜ், அங்குள்ள ராயல் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ்சில் கவுரப் பேராசிரியாக பணியாற்றினார்.

அவர் லண்டனில் கடந்த 1969ல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினார். கிரிட் காம்பஸ் என்ற பெயரில் 1979-ல் முதல் மடிக்கணினியை உருவாக்கினார். முதலில் இது அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 1985-ல் ஏவப்பட்ட டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் பயன்படுத்தப்பட்டது.

மேலும் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியுள்ளார். பின்னர் அமெரிக்காவில் குடியேறிய அவர், நியூயார்க் நகரில் கூப்பர் ஹெவிட் தேசிய வடிவமைப்பு அருங்காட்சியகத்தின் இயக்குநராகப் பதவி வகித்தார். 2010 வரை இப்பதவியில் இருந்த அவர் பின்னர் புற்றுநோய் பாதிப்பினால் அதிலிருந்து விலகினார். நோயின் தீவிரம் அதிகரிக்கவே கடந்த சில நாள்களாக உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று அவர் மரணமடைந்தார்.

English summary
British designer William Grant "Bill" Moggridge, the first laptop designer died of cancer on saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X