6 மாசம் சாப்பிட்டு, 6 மாசம் சாகச் சொல்கிறதா மத்திய அரசு . இல்லத்தரசிகள் குமுறல்

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திலும் கையை வைத்து விட்டது மத்திய அரசு. இனிமேல் வருடத்திற்கு 6 முறை மட்டுமே மானிய விலைக்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். அதற்கு மேல் வாங்குவதாக இருந்தால் தற்போது மானிய விலையில் தரப்படும் சிலிண்டரை விட இரண்டு மடங்கு விலை கொடுத்தாக வேண்டும்.
இது மக்களை குறிப்பாக இல்லத்தரசிகளை கடும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து ஒரு பெண்மணி கூறுகையில், எங்கள் வீட்டில் 6 பேர் இருக்கிறோம். 40 நாட்கள் வரைதான் ஒரு சிலிண்டர் வரும். சில நேரங்களில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து விட்டால் அதுவும் குறைந்து 30 நாட்களாகி விடும். ஆக வருடத்திற்கு எங்களுக்கு 12 சிலிண்டர்கள் தேவைப்படும்.
இப்போது 6 சிலிண்டர்தான் மானிய விலைக்கு என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படிப் பார்த்தால் நாங்கள் இனிமேல் 6 சிலிண்டர்களை மட்டுமே குறைந்த விலைக்குப் பெற முடியும். ஆனால் மற்ற 6 சிலிண்டர்களையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதை எப்படி ஏற்க முடியும். என்ன நியாயம் இது.
சிலிண்டர் இல்லாமர் ஒரு வேலையம் நடக்காது என்பது மத்திய அரசுக்குத் தெரியாதா. அவர்கள் வீட்டில் சிலிண்டர் இல்லாமல்தான் சமையல் செய்கிறார்களா. இப்படி வீட்டு சமையலறை வந்து வயிற்றில் அடித்தால் எப்படி. இதுதான் நல்லாட்சியா. ஒரு பெண்ணை கட்சித் தலைவராகக் கொண்ட கட்சி ஆட்சி புரியும் அரசு இதைச் செய்திருக்கக் கூடாது என்று அவர் குமுறினார்.
அமைச்சர்கள், விஐபிக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் வருடத்திற்கு நூற்றுக்கணக்கில், கணக்கே இல்லாமல், வரைமுறையே இல்லாமல் சிலிண்டர்களை மத்திய அரசு தூக்கிக் கொடுப்பதையும் மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறதோ...?
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications