ராஜ குடும்பத்திற்கு மறுபடியும் ஒரு 'சங்கட்டம்'...மேலாடை இல்லாத கேட் படம் ரிலீஸ்!

இங்கிலாந்து ராஜ குடும்பத்தினரின் ஒவ்வொரு அசைவும், நகர்வும் மேற்கத்திய மீடியாக்களுக்கு பெரிய நியூஸ். சமீபத்தில்தான் இளவரசர் ஹாரி, லாஸ் வேகாஸில் நிர்வாண கோலத்தில் சுற்றித் திரிந்த காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி ஓய்ந்தார்கள். இப்போது ஹாரி எங்கு போனாலும், அவர் டிரஸ் போட்டுச் செல்வதாக வித்தியாசமாக செய்தி வெளியிட்டு கலகலக்க வைக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது இளவரசர் ஹாரியின் அண்ணி அதாவது அண்ணன் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் குறித்த ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளது பிரெஞ்சு பத்திரிக்கை ஒன்று. அதாவது கேட் மிடில்டனின் டாப்லெஸ் போஸ் படத்தை வெளியிட்டுள்ளது அந்த பத்திரிக்கை.
உலகிலேயே மிகவும் எக்ஸ்க்ளூசிவான படம் என்றும் அந்தப் பத்திரிக்கை இந்தப் படங்களை அறிவித்துள்ளது. தனது இணையதள பதிப்பு மூலம் இந்தப் படங்களை அது ரிலீஸ் செய்துள்ளது. அதில், ஒரு கெஸ்ட்ஹவுஸ் மாடியில் இளவரசி கேட் மிடில்டன் மேலாடை இல்லாமல் இருக்கும் படங்கள் இவை.
கடந்த வாரம் வில்லியமும், கேட் மிடில்டனும், பிரான்ஸில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
பத்திரிக்கையின் அட்டையிலும், உள்ள ஐந்து பக்கங்களிலும் இந்த டாப்லெஸ் படங்களைப் போட்டு நிரப்பியுள்ளது அந்தப் பத்திரிக்கை. கருப்பு வெள்ளை பிகினியில் காட்சி தரும் கேட், பல படங்களில் மேலாடை கூட இல்லாமல் தோன்றுகிறார்.
தற்போது வில்லியமும், கேட்டும் மலேசியா போயுள்ளனர். இந்தப் படங்கள் வெளியானது குறித்து இருவரும் பெரும் சோகமும், வருத்தமும் அடைந்துள்ளனராம்.
இப்படித்தான் முன்பு பிரெஞ்சு மீடியாக்கள் இளவரசி டயானாவை விடாமல் துரத்தினர். அந்த துரத்தல் 1997ம் ஆண்டு பெரும் துயரத்தில் முடிந்து, டயானா சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது என்று இங்கிலாந்து ராஜ குடும்பத்தின் விசுவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். இப்போது கேட் மிடில்டனை இப்படிப் படம் எடுத்து வெளியிட்டுள்ளதன் மூலம் பிரான்ஸ் மீடியாக்களின் கொலை வெறி மோகம் மறுபடியும் பிறப்பெடுத்து விட்டதோ என்று ராஜ குடும்பத்தினரும் கவலை அடைந்துள்ளனராம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications