திருப்பதி கோவிலுக்கு 2 புதிய குதிரைகள் : தொழில் அதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி காணிக்கை
திருமலை: திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு இரண்டு குதிரைகளை தொழில் அதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி காணிக்கையாக வழங்கினார். சனிக்கிழமையன்று நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர் தேவஸ்தான நிர்வாகத்திடம் குதிரைகளை ஒப்படைத்தார்.
செட்டிநாடு குழும நிறுவனங்களின் தலைவரும் பிரபல தொழில் அதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, சென்னை குதிரைப்பந்தய சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார் அவரிடம், ஏராளமான குதிரைகள் உள்ளன.
திருமலையில் உள்ள வெங்கடேசப் பெருமாளின் தீவிர பக்தரான எம்.ஏ.எம்.ராமசாமி, சனிக்கிழயன்று இரவு திருப்பதிக்கு சென்றார் அங்கிருந்து திருமலைக்கு சென்ற அவரை, திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பிரதான வாசலில் அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து எம்.ஏ.எம்.ராமசாமி 2 பெண் குதிரைகளை தேவஸ்தானத்திற்கு காணிக்கையாக வழங்கினார். அவற்றை தேவஸ்தான துணை அதிகாரி சீனிவாசராஜூ பெற்றுக்கொண்டார்.
எம்.ஏ.எம்.ராமசாமி காணிக்கையாக வழங்கியுள்ள குதிரைகளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமலை கோவிலுக்கு எம்.ஏ.எம்.ராமசாமி, ஏற்கனவே 5 குதிரைகளை காணிக்கையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில், ஏற்கனவே 9 குதிரைகள் உள்ளன. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள 2 குதிரைகளையும் சேர்த்து, தற்போது மொத்தம் 11 குதிரைகள் உள்ளன. இந்த குதிரைகள், திருமலையில் நடக்கும் திருவிழா காலங்களில் நன்கு அலங்கரிக்கப்பட்டு, சாமி ஊர்வலத்தின் முன்பு அணிவகுத்து செல்லும் என்று தேவாஸ்தான துணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications