விமானத்தில் பெண்ணுக்கு வலிப்பு: லண்டன் விமானம் சென்னையில் தரையிறங்கியது!
சென்னை: விமானத்தில் பெண் பயணிக்கு வலிப்பு ஏற்பட்டதால் லண்டன் செல்லும் ஆஸ்திரேலிய விமானம் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அபுதாபி வழியாக லண்டனுக்கு 160 பயணிகளுடன் ஆஸ்திரேலிய நாட்டு விமானம் சென்று கொண்டிருந்தது.
நேற்று நள்ளிரவு 11 மணியளவில் அந்த விமானம் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது சிட்னியை சேர்ந்த ஒஸ்மின் (26) என்ற பெண் பயணிக்கு வலிப்பு ஏற்பட்டு இருக்கையில் இருந்து கீழே விழுந்து துடித்தார்.
இதையடுத்து விமானிகள் உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அதிகாரிகள் அனுமதித்தனர்.
விமானம் தரை இறங்கியதும் டாக்டர்கள் குழுவினர் அந்தப் பெண்ணுக்கு முதலுதவி அளித்தனர். அந்த பெண்ணுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் தாற்காலிக விசாவை குடியுரிமை அதிகாரிகள் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் 11.15 மணிக்கு தரை இறங்கிய விமான நள்ளிரவு 1.30 மணிக்கு அபுதாபி புறப்பட்டு சென்றது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications