மிரட்டி மிரட்டி அண்ணியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: அண்ணி என்றும் பாராமல் அடிக்கடி மிரட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் புளியங்கண்ணு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கல்னா. 24 வயதாகும் அவரை அவரது மாமா மகன் பழனி காதலித்து வந்துள்ளார். ஆனால் இதை கல்பனா ஏற்கவில்லை.

இந்த நிலையில் கல்பனாவை, பழனியின் அண்ணன் புண்ணியகோடிக்குப் பேசி முடித்துத் திருமணம் செய்துள்ளனர். இது பழனிக்கு வசதியாகப் போய் விட்டது. திருமணத்திற்குப் பின்னர் கல்பனாவை மிரட்டிய அவர், உனக்கும், எனக்கும் திருமணத்திற்கு முன்பே பழக்கம் இருந்ததாக கூறி உனது வாழ்க்கையை கெடுத்து விடுவேன் என்று கூறி மிரட்டி உல்லாசம் அனுபவித்தார். பிறகு இதையே தொடர்ந்து கடைப்பிடித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கல்பனா கர்ப்பமானார். ஆனாலும் விடாமல் பழனி கல்பனாவை சித்திரவதை செய்துள்ளார். ஒருமுறை தனது மனைவியும், தம்பியும் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து விட்டார் புண்ணியகோடி. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கல்பனாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இதனால் வேதனை அடைந்தார் கல்பனா. இதைப் பார்த்த பழனி, ஒரு வேளை எனது அண்ணன் உன்னை விவாகரத்து செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தனது தாய் வீட்டுக்குப் போனார் கல்பனா. அங்கு போய் யோசித்துப் பார்த்த அவர், பழனி மீது போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்துப் போலீஸார் பழனியைக் கைது செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police arrested an youth for having forced relationship with his brother's wife in Ranipettai.
Please Wait while comments are loading...