காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட விஜய்.. கேசி வேணுகோபாலின் பதில் இதுதான்.. தவெகவிற்கு வரும் ஹேப்பி நியூஸ்?
சென்னை: ''தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டுள்ளார். தமிழகத்தை பாஜக மற்றும் அதன் கைப்பாவைகள் தமிழகத்தை வழிநடத்த அனுமதிக்க கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது'' என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கூறியுள்ள நிலையில் டெல்லியில் நடந்த மீட்டிங்கில் என்ன நடந்தது? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி தவெகவிற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக டெல்லியில் இன்று காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முக்கிய மீட்டிங் நடத்தினர். இந்த மீட்டிங்கில் தமிழக சட்டசபை தேர்தல் நிலவரம் பற்றியும், தேர்தலுக்கு பிந்தைய சூழல் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்த மீட்டிங்கிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் (அமைப்பு) பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸிடம் ஆதரவு கேட்டுள்ளார். தமிழக மக்கள் மதசார்பற்ற அரசு அமைப்பதற்கே வாய்ப்பு வழங்கி உள்ளதை காங்கிரஸ் புரிந்து கொள்கிறது. பாஜக மற்றும் அதன் கைப்பாவைகளை தமிழகத்தை வழிநடத்தஅனுமதிக்க கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.
காமராஜரிடம் இருந்து உத்வேகம் பெற்றுள்ளது பற்றி விஜய் பேசி உள்ளார். தமிழகத்தில் மக்கள் அளித்த தீர்ப்பு மற்றம் மாநிலத்தின் உணர்வை கருத்தில் கொண்டு காங்கிரஸ் மேலிடம் இறுதி முடிவு எடுக்க உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications