மியாமி படகுப் போட்டிக்கு 'துள்ளலாக' வந்த கிம் கர்தஷியான்!

மியாமியில் நடைபெறும் பாம்புப் படகுப் போட்டி பிரபலமானது. இந்தப் படகுப் போட்டியில் கிம் கர்தஷியான் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இதற்காக கிம்மும், அவரது அம்மா கிறிஸ் ஜென்னரும் வந்திருந்தனர். கூடவே கிம்மின் அக்காள் கர்ட்னி, தங்கச்சி கைலி, வளர்ப்புத் தந்தை, அதாவது கிம்மின் தாயாருடைய 2வது கணவர் ப்ரூஸ், பெஸ்ட் பிரண்ட் ஜோனதன் செபன் ஆகியோரும் வந்திருந்தனர்.
இத்தனை பேர் கூட்டமாக வந்திருந்தாலும் அத்தனை பேரின் கண்களும் கிம் மீதுதான் படிந்திருந்தன. காரணம், அவரது கவர்ச்சி, அழகு. படகுப் போட்டிக்கு முன்பு வார்ம் அப்புக்காக சில உடற்பயிற்சிகளை அங்கிருந்த புல்வெளியில் செய்தார் கி்ம். அதுதான் கிம் அன் கோவின் ஹைலைட் கவர்ச்சியாக இருந்தது.
படு இறுக்கமான, இறக்கமான டாப்ஸும், லெக்கிங்ஸும் போட்டிருந்தார் கிம். அந்த டாப்ஸில் கிம்மின் கிளீவேஜ் படு சுதந்திரமாக தெரிந்தது.
மொத்தத்தில் படகுப் போட்டியை கிம் போட்டிருந்த உடையும், அதில் வெளித் தெரிந்த அவரது கவர்ச்சியும்தான் ஏக களேபரமாக இருந்தது.












Click it and Unblock the Notifications