கூடங்குளத்தில் மின் உற்பத்தியை துவங்க கோரி வாகனப் பேரணி: சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் துவங்க கோரி, வாகனப் பேரணியும், பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் 5 லட்சம் புத்தகங்களும் வழங்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தின் மின் பற்றாக்குறைக்கு என்ன செய்வது என்று நாம் சிந்தித்தால், கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு ஏன் அலைவானேன் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. நம் கண் எதிரே தோன்றுவது கூடங்குளத்தில் முதற்கட்டமாக உற்பத்தியாக இருக்கும் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் ஆகும்.

தமிழகத்தின் மின் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு அந்த ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து மக்களின் அச்ச உணர்வை போக்க வேண்டும் என்பதில் முதல்வரின் எண்ணமும், மக்களின் எண்ணமும், போராட்டக் குழுவினரின் எண்ணமும் ஒன்று தான்.

அதே சமயம் தமிழக மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு இன்று மின் வெட்டினால் பாதிக்கப்படுகின்ற தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கல்விக் கூடங்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பட்ட மக்களும் இருளில் தள்ளப்படுவதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

அணுமின் நிலையத்தினால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும், மத்திய அரசும் உறுதி அளித்துள்ளது. மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று தேசியப் பேரிடர் பேராண்மை ஆணையமும் அறிவித்துள்ளது.

எனவே நாட்டு மக்களின் நலன் கருதி போராட்டக் குழுவினரும், அப்பகுதி மக்களும், மாநில மத்திய அரசின் மீது நம்பிக்கை கொண்டு, தமிழகம் ஒளி பெற கூடங்குளம் அணுமின் நிலை எதிர்ப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்.

மின் பற்றாக்குறையை போக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தி பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தி தமிழகத்தில் விழிப்புணர்ச்சி வாகன பேரணி ஒன்றை விரைவில் நடத்த உள்ளோம். அதற்கு நானே தலைமை ஏற்க உள்ளேன். பேரணி துவங்கி முடியும் இடம், எத்தனை நாட்கள் என்பதை விரைவில் அறிவிப்போம்.

கூடங்குளம் குறித்து பொது மக்கள் விழிப்புணர்வு பெற 5 லட்சம் புத்தகங்களை சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் அச்சிட்டு வழங்க உள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+