மாணவர்களுக்கு முன்பு டிரஸ்ஸைக் கழற்றிப் போட்டு கூச்சலிட்ட அமெரிக்கப் பேராசிரியர்
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவர்கள் முன்பு திடீரென டிரஸ்ஸைக் கழற்றிப் போட்டு நிர்வாணமாக நின்று தாறுமாறாக கூச்சலிட்டார். மேலும் தனது முகத்தை கண்ணாடி ஜன்னலில் மோதிக் கொண்டார். கூச்சலிட்டபடியே தனது வகுப்பை விட்டும் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தப் பேராசிரியரை போலீஸார் விரைந்து வந்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று பரிசோதனையும் நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தை அந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் போட்டுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள செய்தியில், எனது கணித ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென ஆடைகளைக் கழற்றிப் போட்டு விட்டு நிர்வாணமானார் என்று கூறியுள்ளார்.
இன்னொரு மாணவர் கூறுகையில், வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென எனது கணித ஆசிரியர் கோபத்துடன் கத்த ஆரம்பித்தார். வகுப்பின் நடுவில் நின்றபடி கூச்சலிட்டார். பிறகு அங்கிருந்த கண்ணாடி ஜன்னலை தனது கைகளால் வேகமாக தட்டி உடைத்தார். பிறகு தனது முகத்தையும் அதில் மோதினார். பிறு வெளியே போய் விட்டார்.
ஆனால் மறுபடியும் வேகமாக உள்ளே வந்த அவர் வகுப்பு நடுவில் நின்றபடி தனது உடைகளைக் கழற்றி நிர்வானமானார். காலில் ஷூ மட்டுமே இருந்தது. பின்னர் போலீஸாருக்குத் தகவல் போய அவர்கள் விரைந்து வந்து அழைத்துச் சென்றனர்.
பேராசிரியரின் செயலைப் பார்த்து பீதியடைந்த நாங்கள் வெளியே ஓடி வந்து விட்டோம். இப்படி ஒரு செயலை நாங்கள் பார்த்ததே இல்லை என்றார் அவர்.
இந்தக் கால் மணி நேர களேபரத்தைத் தொடர்ந்து பேராசிரியரை அழைத்துச் சென்ற போலீஸார் அவருக்கு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்தனர். இருப்பினும் அவர் மீது இதுவரை குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications