For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் லஞ்சம் வாங்கினேன் என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.. ப.சி. சவால்

Google Oneindia Tamil News

P Chidambaram
டெல்லி: இந்தியாவில் உள்ள ஒருவரை என் முன் நிறுத்தி, இவர் ஒரு ரூபாயாவது லஞ்சம் வாங்கினார் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தியாவில் உள்ள அமைச்சர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குகிறார்கள் என்று கூறுவது முட்டாள்தனமானது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பிபிசி தொலைக்காட்சிக்கு ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். ப.சிதம்பரம் தனது பேட்டியில் கூறுகையில், வங்கித்துறை, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேலும் பல சீர்திருத்தங்கள் வரப் போகின்றன. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை மீண்டும் எட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சில அடிப்படை முரண்பாடுகளை, குழப்பங்களை நாங்கள் நீக்கும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளோம். எனவே எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார் ப.சிதம்பரம்.

பின்னர் பிபிசி செய்தியாளர் ப.சிதம்பரத்திடம், பெரும்பாலான அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதாக மக்களிடையே கருத்து உள்ளது. நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலாவது அப்படி வாங்கியுள்ளீர்களா அல்லது வாங்கத தூண்டியுள்ளீர்களா என்று கேட்டபோது, சீரியஸானார் ப.சிதம்பரம்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், இந்தியாவிலோ அல்லது உலகத்தில் வேறு எந்த பகுதியிலேயோ உள்ள ஒரு நபரை என் முன் கொண்டு வந்து நிறுத்தி அவரை, இவருக்கு ஒரு ரூபாயாவது லஞ்சம் கொடுத்தேன் என்று என்னை பார்த்து சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். பின்னர் தொடர்ந்து, பெரும்பாலான அமைச்சர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற கருத்தே முட்டாள்தனமானது என்றார் சிதம்பரம்.

English summary
Finance Minister P. Chidambaram promised more reforms in banking and insurance, among other sectors, and expressed confidence that the country will return to 9 per cent growth. He also refuted the charge that most of the ministers accept bribes during their tenure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X