ஹசாரேவின் 'பிளான் 2013'!: ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் மீண்டும் போராட்டமாம்!!

இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் செய்தியாளர்களிடம் அன்னா ஹசாரே கூறியதாவது:
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன். இந்த சுற்றுப்பயணதின் போது வலுவான லோக்பால் மசோதா மற்றும் நல்லாட்சிக்கு தேவையான பிற சட்டங்களை இயற்றிக் கோரி அரசுக்கு மக்கள் மூலம் நெருக்கடி கொடுக்கச் செய்ய உள்ளேன். எனது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையை செய்வார்கள்.
பீகாரில் போராட்டம் தொடக்கம்
2013, ஜனவரி மாதம் பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள மைதானத்தில் இருந்து எனது பயணத்தை தொடங்க உள்ளேன். இங்கிருந்துதான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தனது மக்கள் இயக்கத்தை தொடங்கினார். எனது சுற்றுப்பயணம் 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தின மாதம் வரை நடைபெறும். எனது இந்த இரண்டு ஆண்டு கால சுற்றுப் பயணத்தில் கோடிக்கணக்கான மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
நான் கண் ஆபரேசன் செய்து கொண்டுள்ளதால் தான் எனது நாடு தழுவிய பிரசார சுற்றுப் பயணத்தை தாமதமாக தொடங்க வேண்டியதாயிற்று. இவ்வாறு அவர் கூறினார்.
அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார். இதற்காக டெல்லியில் இரண்டு முறை உண்ணா விரத போராட்டங்களை நடத்தி இருக்கிறார். ஹசாரே இயக்கத்தில் இருந்து 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டதை அடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இப்போது இருவரும் தனித்தனியாக ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications