கர்நாடகம் கைவிரித்தாலும் கனமழை கை கொடுக்க மேட்டூர் அணை நீர்மட்டம் உயருகிறது!

காவிரி பாசன பகுதிகளில் மழை பெய்துவருவதால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடுவது கணிசமாகக் குறைக்கப்ப்ட்டு விட்டது. இதனாலும் மழை தொடருவதாலும் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. 62.87 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 63.30 அடியாக உயர்ந்தது.
இதேபோல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 121 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1907 கன அடி தண்ணீர் வருகிறது. 1,134 கன அடி தண்ணீர் வெளியேறியது. வைகை அணையின் நீர்மட்டம் 42.91 அடியாக உள்ளது. அணைக்கு 1,549 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 60 கன அடி தண்ணீர் வெளியேறியது.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 2 அடிக்கு மேல் உயர்ந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 3.20 அடி உயர்ந்தது. மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சாஸ்தா அணை நிரம்பி வழிகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications