ஒபாமாவுக்கு ஓட்டுப் போட்டா ராம்னிக்கு விழுதே... அது எப்படி? - அமெரிக்க தேர்தல் கலாட்டா!!
வாஷிங்டன்: கலிஃபோர்னியா உள்ளிட்ட மேற்கு கரையோர பகுதிகளில் இன்னும் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் வேளையில், கிழக்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது.
கடும்போட்டி நிலவும் ஃப்ளோரிடா, ஒஹயோ மாநிலஙகளில் ஒபாமா முன்னிலை வகிக்கிறார். வர்ஜினியாவில் ராம்னி முன்னிலையில் இருக்கிறார். ஆட்டோமொபைல் தொழிலைப் பாதுகாத்த ஒபாமாவுக்கு ஒஹயோ ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.

ஃபாக்ஸ் சானல் கணிப்பு
முன்னதாக, தீவிர வலதுசாரி என கருத்தப்படும் குடியரசுக் கட்சி சார்பு ஃபாக்ஸ் தொலைக்காட்சி, ஒபாமா வெற்றி பெறுவார் என கணித்துள்ளது. அதன் செய்தியாளர் லானி டேவிஸ், 281 வாக்குகள் பெற்று ஒபாமா வெற்றிபெறுவார் என தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் சானல் கடும் போட்டி என்று நாம் குறிப்பிட்டிருந்த நெவடாவையும் ஒபாமா வென்று கூடுதலாக 6 வாக்குகள் பெறுவார் என குறிப்பிட்டுள்ளது. இது வரை ராம்னியை தீவிரமாக ஆதரித்து வந்த ஃபாக்ஸ் சானலின் இந்த கணிப்பு பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
வாக்கு எந்திரத்தில் கோளாறு
பென்சில்வேனியாவில் ஒபாமாவுக்கு வாக்களித்தால், ராம்னிக்கு பதிவானதாக செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இதை செல்போனில் படம்பிடித்து யூடியூபிலும் ஒபாமா கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பென்சில்வேனியாவில் அடையாள அட்டை இல்லாமலே வாக்களிக்க முடியும் என்ற நிலையில், ஒபாமாவுக்கு வாக்களிக்கும் ஆப்ரிக்கன் அமெரிக்கர்களை குறிவைத்து அடையாள அட்டை கேட்டார்களாம். கொண்டு வராதவர்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன். வெள்ளை இன மக்களுக்கு இந்த மாதிரி கெடுபிடிகள் இல்லையாம்!
ஒஹயோவிலும் ஆப்ரிக்கன் அமெரிக்கர்கள் அதிகமாக வசிக்கும் க்ளிவ்லேண்ட் பகுதியில் பெருவாரியானவர்கள் வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்று வாக்களிக்க மறுக்கப் பட்டுள்ளனர். இது குறித்து பல புகார்கள் தெரிவிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ராம்னி இன்று க்ளிவ்லேண்ட் மற்றும் பிட்ஸ்பர்க் நகருக்கு விசிட் செய்ததற்கும், இரு மாநிலங்களிலும் குடியரசுக் கட்சி கவர்னர்கள் ஆட்சியில் இருப்பதும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன
பிரசவத்திற்கு முன் ஓட்டு
சிகாகோவில் காலிசியா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னால், வாக்குசாவடிக்கு சென்று வாக்களித்திருக்கிறார். அவர் ஒபாமாவுக்கு வாக்களித்துள்ளதாக தெரிகிறது.
முதல் முறையாக வாக்களிக்கும் இவர், பிறக்கப்போகும் தனது மகளுக்கு படிக்கட்டாக இது அமையவேண்டும் என்று வாக்களித்ததாக சொல்லியுள்ளார். வாக்களித்து விட்டு தனது காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகியுள்ளார்.
குடும்பத்தாருடன் 'கூல்' ஒபாமா!
தேர்தல் வாக்குகள் வெளி வரத்தொடங்கியுள்ள நிலையில் ஒபாமா, சிகாகோவில் அவரது வீட்டில் மனைவி மிஷல், மகள்கள் மற்றும் மாமியார் ஆகியோருடன் இரவு உணவருந்திக் கொண்டு, குடும்பத்தினரோடு செலவழித்துக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக சிகாகோவிலுள்ள அவரது தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு விசிட் செய்த அவர், தேர்தல் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். சில வாக்காளர்களுடன் நேரிடையாக போனில் பேசி ஆதரவு திரட்டினார். ஏனைய தேர்தல் அலுவலகங்களில் உள்ள ஆதரவாளார்களுடனும் தொலைபேசியில் பேசி நன்றி தெரிவித்தார்.
-அமெரிக்க தேர்தல் ஸ்பெஷல்
-
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications