For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் தேர்தல்- பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்.. மோடி மணி நகரில் போட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 84 பாஜக வேட்பாளர்களின் பெயர்களை டெல்லி பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் நரேந்திர மோடி மீண்டும் அகமதாபாத்தில் உள்ள மணி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 13 மற்றும் 17 ஆகிய இரு தினங்களில் இரு கட்டமாக பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 181 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜகவும், காங்கிரஸும் பிரதான கட்சிகளாக களத்தில் உள்ளன.

தற்போது இரு கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட ஆரம்பித்துள்ளன. காங்கிரஸ் முதல் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது பாஜக தனது முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.

84 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலில் முதல்வர் மோடியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் மீண்டும் மணிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போதைய எம்.எல்.ஏக்கள் 13 பேருக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது.

முஸ்லீம்கள் யாருமில்லை

84 பேரில் இளைஞர்கள்தான் அதிகம். அதாவது 20 பேர் உள்ளனர். 10 பேர் பெண்கள் ஆவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 6 பேர், பழங்குடியினர் 14 பேர்.

முதல் வேட்பாளர் பட்டியலில் எந்த முஸ்லீமுக்கும் இடம் தரப்படவில்லை. ஒருவேளை அடுத்த பட்டியலில் வரலாமா என்றும் தெரியவில்லை.

மோடியை விமர்சித்த வகேலாவுக்கு நோட்டீஸ்

இதற்கிடையே, முதல்வர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்து பேசிய குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலாவுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக சார்பில் தரப்பட்ட புகாரின் பேரில் வகேலாவுக்கு எச்சரிக்கை விடுத்தது தேர்தல் ஆணையம்.

மோடி, பாஜக தலைவர் நிதின் கத்காரி, பாஜகமூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் சேர்ந்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தனர்.

English summary
The BJP Thursday released here its list of 84 candidates for the first phase of polls in Gujarat Dec 13. Chief Minister Narendra Modi will be contesting from Maninagar in Ahmedabad. Modi, Bharatiya Janata Party (BJP) president Nitin Gadkari, BJP parliamentary party chief L.K. Advani, Leader of the Opposition in Lok Sabha Sushma Swaraj and her Rajya Sabha counterpart Arun Jaitley discussed the list at the central election committee (CEC) meeting before releasing it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X