For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண் விமானப்படை அதிகாரி தற்கொலை: விசாரணைக்கு உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொல்கத்தா: இந்திய விமானப்படை பெண் அதிகாரி ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த அனந்திதா தாஸ் (29). இவர் இந்திய விமானப் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு கிரவுண்ட் டியூட்டி அதிகாரியாக ஜோத்பூரில் பணி நியமனம் செய்யப்பட்டார். அவரது கணவரும் இந்திய விமானப்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

இவர்கள் இருவரும் விமானப்படை அலுவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் அனந்திதா தாஸ் உடல் வீட்டுக்குள் மின் விசிறியில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதிகாலை நேரத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

அவரது உடல் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு:

விமானப்படை அதிகாரியின் தற்கொலை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரியான எஸ்.பி. கோஸ்வாமி கூறியுள்ளார்.

விமானப்படை அதிகாரிகள் அலுவலர் குடியிருப்பில் பெண் அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A woman IAF officer has allegedly committed suicide in Jodhpur. 29-year-old squadron leader Anandita Das was found hanging from a ceiling fan on Wednesday morning. The Indian Air Force has ordered a court of inquiry into the death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X