For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் தேர்தல்: போலி என்கவுன்ட்டர் வழக்கு 'புகழ்' அமித் ஷாவுக்கு வாய்ப்பு தந்த மோடி

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi and Amit Shah
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெளியிட்டுள்ள 3-வது வேட்பாளர் பட்டியலில் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 13, 17 ஆகிஅ தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இம் மாநில சட்டசபை தேர்தலுக்கான 3வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் முன்னாள் அமைச்சர் அமித் ஷா பெயரும் இடம்பெற்றிருக்கிறது. அவர் நாரன்புரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிக நெருக்கமான அமித்ஷா, சோராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மோடிக்கு மிகவும் பெருக்கமான ஆனந்திபென் படேல், காத்லோதியா தொகுதியில் போட்டியிடுகிறார். மற்றொரு மோடியின் சகாவான பரத்பாய் பரோத், தரியாபுர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதேபோல் புதன்கிழமையன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மாநில முன்னாள் துணைத் தலைவர் கிரீஷ் பார்மர், தனிலிம்ப்டா தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் 182 சட்டசபை தொகுதிகளுக்கு இதுவரை 177 வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. இதில் 19 பேர் பெண் வேட்பாளர்கள்.

English summary
Accused, arrested and released on bail in two fake encounter cases, Gujarat's former home minister Amit Shah will now contest as the BJP's candidate from the Narayanpura seat in Ahmedabad. It was certain that Gujarat Chief Minister Narendra Modi's close aide would be given ticket a despite those allegations and that's because Modi himself has often portrayed Shah as a victim of a CBI witch hunt on the political stage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X