கொஞ்சம் 'இறங்கி வந்தது' தங்கம்!

இந்த மூன்று தினங்களில் ரூ 952 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி சவரன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அதைத் தொடர்ந்து உயர்ந்து 26-ந்தேதி சவரன் ரூ.24 ஆயிரத்து 544 ஆனது.
ஆனால் அதன் பிறகு குறைய ஆரம்பித்துவிட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.480 குறைந்தது. நேற்று மேலும் ரூ.112 குறைந்து ரூ.23 ஆயிரத்து 704 ஆக இருந்தது. இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.114 குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 592 ஆகவும், கிராம் ரூ.2,949ஆகவும் விற்பனையாகிறது.
கடந்த 6 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.952 குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததே இந்த விலைக் குறைவுக்குக் காரணம் என கருதப்படுகிறது.
தங்கத்தை போன்றே வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.1925 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.62 ஆயிரத்து 570 ஆகவும், ஒரு கிராம் ரூ.67 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications