For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெறும் பிராவுடன் 'டிரட்மில்'லில் ஓடுவேன்.. சமையல் கலை எழுத்தாளர் நிகல்லா!

Google Oneindia Tamil News

Nigella Lawson
லண்டன்: பிரபல சமையல் கலை எழுத்தாளரும், டிவி தொகுப்பாளருமான நிகல்லா லாசன் தனது உடற்பயிற்சி முறை குறித்து விளக்கியுள்ளார். அதில், பூட்டிய அறைக்குள் வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு டிரட்மில்லில் ஓடி உடற்பயிற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஒரு பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், எனது எடையைக் குறைப்பதிலும், உடலை வனப்புடன் வைத்துக் கொள்வதிலும் நான் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்.

உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால்தான் நாம் தொடர்ந்து சாப்பிடவும் முடியும். அதற்காகவே நான் தினசரி உடற்பயிற்சி செய்கிறேன்.

என் வீட்டு மாடியில் டிரட்மில் வைத்துள்ளேன்.அறைக்குள் போய் பூட்டிக் கொண்டு விடுவேன், உள்ளே யாரும் வர முடியாது. பின்னர் வெறும் பிராவுடன் டிரட்மில்லில் ஏறிக் கொண்டு ஓட ஆரம்பிப்பேன். கூடவே சத்தமாக பாட்டைப் போட்டு விடுவேன். கூடவே நானும் படு சத்தமாக பாடுவேன். பயங்கர சத்தம் போட்டு பாட்டுப் பாடினால் தலையில் உள்ள பாரம் எல்லாம் இறங்கி விடும் என்றார் லாசன்.

நிகல்லாவுக்கு வயது 52 ஆகிறது. ஆனாலும் அதற்கான அறிகுறி எதுவும் உடலிலும், முகத்திலும் தெரியாத அளவுக்கு படு இளமையாக, அழகாக, கட்டுக்கோப்பாக காட்சி அளிக்கிறார். இதன் ரகசியம் என்னவோ என்று கேட்டால், இப்போதெல்லாம் நான் குடிப்பதில்லை. தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறேன் என்று சிரித்தபடி கூறுகிறார் நிகல்லா.

English summary
Cookery writer and presenter Nigella Lawson has revealed that she burns calories in the privacy of her home by running on a treadmill in just her bra. "Exercise is the only thing that means I can still eat. It's about keeping the status quo," the Telegraph quoted her as saying.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X