மும்பை கார்ப்பரேஷன் வார்டு அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடிய சிவசேனா!
மும்பை: மும்பை சிவாஜி பூங்காவில் பால்தாக்கரேவுக்கு நினைவு மண்டபம் அமைக்க முயன்றதை மும்பை மாநகராட்சி தடுத்ததால் அப்பகுதி வார்டு அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர் சிவசேனா கட்சியினர்.
நினைவகம் அமைக்க கோரிக்கை
சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடந்த மாதம் 18-ந் தேதியன்று சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டார். தகனம் செய்வதற்கு ஒருநாள் மட்டும் மும்பை மாநகராட்சி அனுமதி கொடுத்திருந்தது. அப்போதே பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, சிவாஜி பூங்காவிலேயே பால்தாக்கரேவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். பின்னர் சிவசேனா கட்சியினரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.
சவான் நிராகரிப்பு
ஆனால் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானோ இதனை நிராகரித்திருந்தார். சிவாஜி பூங்கா பகுதியை அமைதிப் பிரதேசமாக உயர்நீதிமன்றம் பிரகடனம் செய்திருப்பதால் அங்கு சட்டத்தை மீறி எதுவும் செய்யக் கூடாது என்றும் சிவசேனாவினர் சமாதி அமைக்கும் பணியை கைவிட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி நிர்வாகமும் சிவசேனாவினர் சிவாஜிபூங்காவில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. மும்பை மாநகராட்சியோ பாஜக-சிவசேனா வசம்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூறையாடல்
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தெற்கு மும்பையில் வோர்லியில் இருக்கக் கூடிய மும்பை மாநகராட்சி வார்டு அலுவலகத்தை நேற்று இரவு சிவசேனா கட்சியினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர். இந்த சூறையாடல் சம்பவத்தில் 7 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து வார்டு அலுவலகங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications