மக்கள் படும் பாட்டைப் பார்க்கையில் தான் ஆட்சியைப் பிடிக்கவே தோன்றுகிறது: ஸ்டாலின்

முன்னாள் சட்டசபை உறுப்பினர் பி.கே. சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள அன்பகத்தில் நேற்று மாலை நடந்தது. அதில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் முக ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது,
கருணாநிதி மற்றும் என்னுடைய பிறந்தநாள்களை முன்னிட்டுத் தான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதியும், எனது பிறந்தநாள் மார்ச் 1ம் தேதியும் வருகிறது. இப்படி பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்குவதால் 6 முதல் 3 மாதத்திற்கு ஒரு முறை பிறந்தநாள் வரக்கூடாதா என்று தோன்றுகிறது. வயதைக் கூறினால் ஆயுள் குறையும், அழகு கெடும் என்று நினைக்கின்றனர். கருணாநிதிக்கு வயது 89, பேராசிரியருக்கு 90, திமுகவுக்கு 100 வயது ஆகிறது. இது போன்ற வரலாறு உலகில் உள்ள வேறு எந்த இயக்கத்திற்கும் கிடைத்திருக்காது.
ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி திமுக ஒரு நாளும் துவண்டு போவதில்லை. ஆட்சியில் இல்லாமல் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மக்கள் படும் அவஸ்தையைப் பார்க்கையில் தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. திமுக 5 முறை ஆட்சிக்கு வந்துள்ளது. அப்போதெல்லாம் யாரும் நினைத்துக் கூட பார்க்காத பல சாதனைகளைச் செய்துள்ளது.
கருணாநிதி இவ்வளவு திட்டங்களை கொண்டு வந்தார் என்றால் ஜெயலலிதா இன்னும் எத்தனை திட்டங்களை கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பில் தான் மக்கள் வாக்களித்தனர். அதிமுகவை நம்பி வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் தஞ்சையில் மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி நடந்தது. அப்போது ஒரு மாணவன் பேசுகையில், ஏ.எம்., பி.எம். பார்ககாமல் உழைத்த ஒரே சி.எம். கருணாநிதி தான் என்றான். இதன் மூலம் தற்போதைய அரசியல் சூழலை மாணவர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளது தெரிகிறது என்றார்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications