டெங்கு.. நெல்லை அரசு மருத்துவமனையிலும் நிலவேம்பு கசாயம் வினியோகம்
நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நில வேம்பு கசாயம் நேற்று முதல் வழங்கப்படுகிறது.
டெங்கு உள்ளிட்ட விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பு வராமல் முன்னெச்சரிக்கையாக தடுப்பதற்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 6 நாட்களாக நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சிறப்பு முகாம் தொடங்கி இக்கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. 6 நாளில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த மூலிகை நீரை பருகி பயன் அடைந்துள்ளனர். மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் கூடுதல் ஆர்வத்துடன் இப்பணியை மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நிலவேம்பு கசாயம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் 10,000 துண்டு பிரசுரங்களை தயாரித்துள்ளனர். அதில் நிலவேம்பு குடிநீர் அருந்துவோம், டெங்கு காய்ச்சல் பாதிக்காத தமிழகத்தை உருவாக்குவோம் என குறிப்பிட்டு கசாயத்தின் சிறப்பு குறித்து விளக்கியுள்ளனர்.
இந்த துண்டு பிரசுரம் வினியோகிக்கும் நிகழ்ச்சி நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சியில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மனோகரன் தலைமை வகித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications