காந்தீய வழியை பின்பற்றும் ராகுல் காங்கிரஸ் கட்சியை கலைக்கத் தயாரா?.... மோடி கேள்வி

குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்கிழமை மாலையுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் பிரசாரம் மேற்கொண்டார். சவுராஷ்டிரா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், நரேந்திரமோடியை கடுமையாக விமர்ச்சித்தார்.
என் வழி காந்தி வழி
குஜராத்தில் 10 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மையினால் அவதிப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் பலர் குஜராத் மின்னுவதாக கூறுகின்றனர். ஏழை மற்றும் அடித்தள மக்களின் குரல்கள் அமுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தை ஆளும் தலைவர்கள் மக்களின் கவலைகளை கேட்க விரும்பவில்லை. ஆனால் மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் மக்களின் குரல்களை கேட்க விரும்பினர். அவர்கள் தான் உண்மையான தலைவர்கள். மகாத்மா காந்தி தான் எனது அரசியல் வழிகாட்டி.
மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களும் தடைபட்டுள்ளது. வருடத்திற்கு 25 நாட்கள் மட்டுமே சட்டசபை நடைபெறுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். மாநிலத்தில் லோக்ஆயுக்தா ஏதும் இல்லை. தகவல்அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள 14 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளது. மாநில அரசு உண்மையை வெளியில் விட விரும்பவில்லை என்றார் ராகுல்
மோடி பதிலடி
இதற்கு மாநில நரேந்திர மோடி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். ராகுல் குஜராத் மாநில சட்டசபையை பற்றி பேசுகிறார். ஆனால் அவர் லோக்சபாவில் எத்தனை நாள் கலந்து கொண்டுள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2011 மே மாதம் முதல் 2012 மே மாதம் வரை, 85 நாட்களில் 24 நாட்கள் மட்டுமே லோக்சபா கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டுள்ளார்.
ராகுல் உண்மையிலேயே மகாத்மா காந்தி வழியை பின்பற்றுகிறாரா? அப்படி எனில் சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் எண்ணத்தை நிறைவேற்றுவாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications