For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிட் வீசுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்: சீமான் ஆவேசம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Seeman
சென்னை: காதலிக்க மறுக்கும் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகி வருகிறது. இது இளம் பெண்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தன்னைக் காதலிக்காத அல்லது திருமணம் செய்து கொள்ள முன்வராத இளம் பெண்களின் முகத்தில் அமிலத்தை வீசி தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. காரைக்காலில் நடந்துள்ள ஒரு நிகழ்வு அரசும், காவல்துறையினரும் கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

ஆசிட் வீச்சுக்கு ஆளான அந்த பெண்ணின் கண் முற்றிலுமாக பார்வையிழந்துவிட்டது. மிகக் கொடூரமான வன்முறைக்கு ஆளான அந்த பெண் மீண்டும் தனது இயற்கையான உருவத்தை அடைய முடியாத துயரமான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் சேலத்திலும், நாகர்கோயிலிலும் இப்படிப்பட்ட அமிலத் தாக்குதல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இப்படி, பெண்களோடு ஏற்படும் முரண் அல்லது தகராறு போன்றவற்றிற்கெல்லாம் பெண்ணின் முகத்தை சிதைப்பது என்கிற கோணத்தில் இந்த குற்றச்செயல்கள் பெருகி வருகின்றன. இதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது வருத்தத்திற்குரியதாகும். இது இளம் பெண்களின் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கி வருகிறது.

பெண்கள் மீது மட்டுமின்றி, தங்களுடைய தொழில், அரசியல் எதிரிகள் மீதும் அமிலத் தாக்குதல் நடந்து வருகிறது. அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய ஒரு சமூக பிரச்சனையாக இது உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட்டாலும் அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை போது மானதாக இல்லை என்பதே மனிதாபிமான செயல்பாட்டளர்களின் கருத்தாக இருக்கிறது. எனவே இப்படிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவோரை, விரைவு நீதிமன்றங்களில் விசாரித்து தண்டிக்க வேண்டும் தண்டனையும் கடுமையாக்கப்பட வேண்டும்.

ஆபத்தான மருந்து பொருட்களை மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பதற்கு மருந்தகங்களுக்கு அனுமதியில்லையோ அதேபோல், அமிலங்களை விற்பனை செய்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். அதேபோல் ஆபத்தான அமிலங்களை விற்பனை செய்யும் முகவர்கள், சில்லரை வியாபாரிகள் ஆகியோரையும் முறையற்ற விற்பனைக் குற்றத்திற்காக வழக்கில் சேர்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மட்டுமே இந்த குற்றச் செயல்களை தடுத்திட முடியும். இதற்கான நடவடிக்கை களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Nam Tamilar movement leader Seeman has condemned acid attackers. He urged the govt to punish them severely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X