For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹில்லாரி இடத்திற்கு ஜான் கெர்ரியை பரிந்துரைக்கும் ஒபாமா

By Siva
Google Oneindia Tamil News

John Kerry
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்கு செனட்டர் ஜான் கெர்ரி பெயரைத் தான் அதிபர் ஒபாமா பரிந்துரைகக்ப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஓய்வு பெறுவதையடுத்து அவரது பதவிக்கு செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராகவும், மசாசுசடஸ் செனட்டராகவும் இருக்கும் ஜான் கெர்ரியை(69) அதிபர் ஒபாமா பரிந்துரைக்கவிருக்கிறார். வெளியுறுவுக் கொள்கை விவகாரங்களில் ஜான் கெர்ரி ஒபாமாவுக்கு பெரிதும் உதவியாக உள்ளார்.

தனக்கு பேருதவியாக உள்ள கெர்ரியை வெளியுறவுத் துறை அமைச்சராக அடுத்த வாரம் ஒபாமா பரிந்துரைப்பார் என்று தெரிகிறது. ஒபாமாவின் பரிந்துரையை செனட் ஏற்றுக் கொண்டால் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி வாக்கில் கெர்ரி வெளியுறவுத் துறை அமைச்சராவார்.

முன்னதாக இலினாய்ஸ் மாநில செனட்டாரக இருந்த ஒபாமா 2004ம் ஆண்டு தேர்தலில் முதன் முறையாக அமெரிக்க செனட்டர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது நடந்த ஜனநாயகக் கட்சி தேர்தலில் அதிபர் பதவிக்கு ஜான் கெர்ரி தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில் சிறப்புரையாற்ற யாரை அழைக்கலாம் என்று கெர்ரியிடம் கேட்டபோது அவர் ஒபாமாவை அழைத்தார். தேசிய அளவில் ஒபாமாவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு அது தான். ஒபாமாவின் சிறப்புரை பெரும் வரவேற்ப்பை பெற்று தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்.

அந்த வகையில் ஒபாமாவுக்கு தேசிய வாய்ப்பு கொடுத்த ‘குரு' ஜான் கெர்ரி தான். 2008 தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, ஜான் கெர்ரியை மிகுந்த மரியாதையுடன் பயன்படுத்திக் கொண்டார். 2012ம் ஆண்டு தேர்தலில் ஜான் கெர்ரி, ஒபாமாவுக்கு பெரும் உதவியாக இருந்து தேர்தல் சவால்களை முறியடிக்க உறுதுணையாக இருந்தார். அதிபர் விவாதத்திற்கு தயார் செய்ய, கெர்ரி எதிர்கட்சி வேட்பாளர் 'மிட் ரோம்னி' போல் பயிற்சி விவாதத்தில் பங்கு எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
US President Barack Obama is likely to nominate Senator John Kerry as his next Secretary of State, according to the media reports. 69-year-old Kerry, currently the chairman of the powerful Senate Foreign Relations committee, has been a close confidant of Obama on his foreign policy issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X