எலிக்கு வைத்த விஷம் கலந்த கடலையைச் சாப்பிட்ட 2 வயது பெண் குழந்தை பலி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் எலிக்கு வைத்த விஷத்தை சாப்பிட்ட 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக பலியானது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்து உள்ள வட ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருண்.(36). அவரது வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்திருக்கிறது. இதையடுத்து அவர் எலிகளைக் கொல்ல விஷம் வாங்கி வந்துள்ளார். அந்த விஷத்தை வேர்க்கடலையில் கலந்து வைத்துள்ளார். கடந்த 15ம் தேதி பிற்பகல் 2 மணி் அளவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அருணின் 2 வயது குழந்தை கயல்விழியின் கண்ணில் விஷம் கலந்த வேர்க்கடலை பட்டுள்ளது.
இதையடுத்து குழந்தை அந்த வேர்க்கடலையை எடுத்து சாப்பிட்டுவிட்டது. கடலையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தை மயங்கியது. அதன் பிறகு குழந்தையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அன்று மாலை 5.30 மணிக்கே குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.
எலியைக் கொல்ல வைத்த விஷம் 2 வயது குழந்தையைக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications