அவதூறு வழக்கு: தேனி நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆப்சென்ட்… ஜன.4ல் ஆஜராக உத்தரவு
Subscribe to Oneindia Tamil
தேனி: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 4-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், முதல்வர் மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசினார் என புகார் எழுந்தது.
இதுகுறித்த வழக்கில் இன்று ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு தேனி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் விஜயகாந்த் இன்று ஆஜராகாவில்லை. இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து ஜனவரி 4-ம் தேதி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி அருள்ராஜ் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications