For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாம் தவறு செய்திருந்தால் 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்: ஹிந்தியில் மோடி உரை

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi
அகமதாபாத்: தாம் தவறு செய்திருந்தால் 6 கோடி குஜராத் மக்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்று அகமதாபாத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வெற்றி விழாவில் மோடி பேசுகையில், குஜராத் மாநிலத்தில் புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது மக்கள் சாதிய அரசியலை நிராகரித்திருக்கின்றனர். இந்த வெற்றி 6 கோடி மக்களின் வெற்றி.

இத்தனை ஆண்டுகாலம் முதல்வராக இருந்த தாம் தவறு செய்திருந்தால் 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் கடுமையாக உழைக்க இருக்கிறேன். நல்லது எது என்பது மக்களுக்கு தெரிந்திருக்கிறது.

நல்லாட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக குஜராத் மக்கள் வாக்களித்திருக்கின்றனர் என்றார் அவர்.

மோடி வழக்கமாக குஜராத்தி மொழியில்தான் பேசுவார். ஆனால் இன்றைய கூட்டத்தி ஹிந்தி மொழியில் மோடி பேசினார். ஏற்கெனவே அவர்தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்று கூறிவரும் நிலையில் அவர் ஹிந்தியில் பேசியது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary
Narendra Modi has won 116 of Gujarat's 182 seats, just one shy of the 117 he had in 2007. This evening, he thanked the people of his state for choosing him for a third time as chief minister and said if there was any hero in this election, "it is my six crore Gujaratis." He also apologised for "if I have faltered anywhere in all these years."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X