காணாமல் போன தலித் மாணவர் கழுத்து அறுத்துக்கொலை; பதற்றம்.... சாலைமறியல்
சிதம்பரம்: சிதம்பரம் அருகே காணாமல்போன தலித் மாணவர் கழுத்து அறுத்துக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் உருவானது.
சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீ முஷ்னம் என்ற ஊரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் அதே ஊரைச்சேர்ந்த வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்த துர்கா என்ற பெண்ணைக் காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே கல்லூரியில் பி.சி.ஏ படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கோபால கிருஷ்ணன் கடந்த வாரம் காணாமல் போனார்.அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும்,அவரைப்ற்றிய எந்த தகவலும் தெரியாமல் போனது.
இதனையடுத்து மாணவரின் தந்தை மாயக்கிருஷ்ணன் டிசம்பர் 14ம் தேதி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் கடந்த திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மாணவர் கோபாலாகிருஷ்ணன் புதன்கிழமையன்று சேத்தியாதோப்பு அருகே ஏரி ஒன்றில் கழுத்து அறுபட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார்.
காதல் விவகாரம் காரணமாகவே இக்கொலை நடந்துள்ளதாக மாணவர் கோபால கிருஷ்ணனின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அண்மையில் தருமபுரி மாவட்டத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை, தலித் இளைஞர் ஒருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து 3 தலித் கிராமங்களில் உள்ள சுமார் 250 வீடுகளில் பொருட்கள் சூறையாடப்பட்டு,வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு மாத காலத்திற்குள் அடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications