Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தப் பொண்ணு, அம்மா விரலைக் கடிச்சு, மென்னு முழுங்கிடுச்சாம்!

Subscribe to Oneindia Tamil

Kirstie Foley
டர்பி, பென்சில்வேனியா: அமெரிக்காவின் டர்பி நகரைச் சேர்ந்த 21 வயதான பெண் தனது தாயின் விரலைக் கடித்து அப்படியே மென்று சாப்பிட்டு விட்டதாக பரபரப்பு எழுந்துள்ளது.

இந்தப் பெண்ணின் பெயர் கிறிஸ்டி போலி. 21 வயதான இவர் அமெரிக்காவின் பென்சிலேவேனியாவின், மேற்கு டர்பி நகரில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். கிறிஸ்டிக்கும், அவரது தாயாருக்கும் இடையே சம்பவ தினத்தன்று கடும் வாக்குவாதம் மூண்டது. பின்னர் அது அடிதடி சண்டையானது. அப்போது தனது தாயாரின் விரலைப் பிடித்து பலமாக கடித்து விட்டார் கிறிஸ்டி. அத்தோடு நில்லாமல் அந்த விரலை அப்படியே கடித்தும், மென்றும் முழுசாக சாப்பிட்டு விட்டார்.

தாயின் கை மட்டுமல்லாமல் காலிலும் பலமாக கடித்துள்ளார் கிறிஸ்டி. தனது மகளின் செயலைப் பார்த்து பயந்து போய் விட்டார் அவரது தாயார். மேலும் மகள் வெறித்தனமாக கடித்ததால் அவரது உயிருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சீரியஸான நிலையி்ல அவர் சேர்க்கப்பட்டுள்ளார். கிறிஸ்டி கடித்ததால் படுகாயமடைந்துள்ள அவரது கைகளில் ஒன்றை அகற்றும் நிலை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது கிறிஸ்டி தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+