For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: இணைய தளம் மூலம் பண மோசடி! 114 சீனர்கள் கூண்டோடு கைது!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் இணைய தளம் மூலம் சீனாவில் உள்ளோரிடம் பணப் பறித்ததாக 114 சீனர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் பெண்கள்.

இலங்கையில் சீனா பெருமளவு நிதி முதலீடு செய்திருக்கிறது. பல சீன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களில் பணிபுரிவதற்காக இலங்கையில் பல ஆயிரம் சீனர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.

இப்படி நடமாடும் சீனர்கள், இலங்கையில் இருந்து கொண்டு சீனாவில் இருப்பவர்களிடம் இணையம் வழியே பணம் பறிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 114 சீனர்களின் விவரங்களை இலங்கையிடம் கொடுத்தது சீன அரசு. அதனடிப்படையில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 114 சீன நாட்டவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 74 பேர் ஆண்கள், பெண்கள் 26 பேர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

English summary
Police in Sri Lanka arrested at least 114 Chinese nationals over an alleged Internet currency fraud, during a string of raids in and around Colombo, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X