டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் சாவு சர்ச்சை: கிரைம் பிராஞ்ச் விசாரணை!
டெல்லி: டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் மரணத்தில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது குறித்த விசாரணை க்ரைம் பிராஞ்ச் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் காயமடைந்த போலீஸ்காரர் சுபாஷ் தோமர் செவ்வாய்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
போராட்டக்காரர்கள் தாக்கியதில் கழுத்து, நெஞ்சு, வயிறு பகுதிகளில் தோமருக்கு காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர் ஒருவர் தவறி கீழே விழுந்ததில் தோமர் காயமடைந்ததாகவும் யாரும் அவரை தாக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதனால்தான் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு டெல்லி போலீசின் க்ரைம் பிராஞ்ச் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் ராஜன் பகத் தெரிவித்தார்.
இதனிடையே, இறந்த போலீஸ்காரர் சுபாஷ் தோமரின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications