ஈரான் சிறையில் இந்திய மீனவர்கள்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது:
தமிழக மற்றும் கேரள மீனவர்கள் 29 பேர் எல்லைத் தாண்டி மீன்பிடித்தக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு கடந்த 50 நாட்களாக ஈரானில் ஈகிள்ஸ் தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்கள் சொல்லொனாத் துயரத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் உணவு உண்ணாமல், தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்கள் இவ்வாறு அன்னிய நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள அவர்களது குடும்பத்தார் கண்ணீருடன் வாழ்வதற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.
ஈரானில் உள்ள சிறைத் துறை அதிகாரிகள், மீனவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. அங்குள்ள நாடாளுமன்றக் குழு உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், சிறையில் உள்ள மீனவர்களின் நிலை குறித்து எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கடிதத்தின் மூலம் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications