For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜோய் ஆலுக்காஸ் பிராண்ட் அம்பாசிடராகத் தொடரும் மாதவன்

By Siva
Google Oneindia Tamil News

Madhavan
திருவனந்தபுரம்: ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக நடிகர்கள் மாதவன், சுரேஷ் கோபி, சுதீப் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மாதவன் மட்டும் ஏற்கனவே ஜோய் ஆலுக்காஸின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக புகழ்பெற்ற மல்டி பில்லியன் டாலர் குழுமமான ஜோய் ஆலுக்காஸ் குழுமம் தனது பழைய பிராண்ட் அம்பாசிடர்களை மாற்றிவிட்டு நடிகர்கள் மாதவன், சுரேஷ் கோபி, சுதீப் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரை புதிதாக நியமனம் செய்துள்ளது. இதில் ஏற்கனவே ஜோய் ஆலுக்காஸின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் மாதவனை மட்டும் தக்க வைத்துள்து. இந்த 4 பேரும் அவரவர் மாநிலத்தில் புகழ்பெற்ற நடிகர்கள் என்பதால் அவர்கள் மூலம் ஜோய் ஆலுக்காஸை விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாதவன், கேரளாவில் சுரேஷ் கோபி, ஆந்திராவில் அல்லு அர்ஜுன், கர்நாடகத்தில் சுதீப் ஆகியோர் ஜோய் ஆலுக்காஸை விளம்பரப்படுத்துவார்கள். ஜோய் ஆலுக்காஸின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு 'உலகளவில் உள்ளூரில்' என்ற புதிய தாரக மந்திரத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

'உலகளவில் உள்ளூரில்' என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப வரும் 3 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் கூடுதலாக 60 ஷோரூம்களை துவக்கவுள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக இம்மாதம் புதிய விளம்பர பிரச்சாரத்தை துவக்க திட்டமிட்டுள்ளது. இந்த குழுமம் சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளது. மேலும் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு இக்குழுமத்தின் சென்னை ஷோரூமை உலகின் மிகப்பெரிய ஜுவல்லரி ஷோரூமாக அங்கீகரித்துள்ளது. இது தவிர அமீரகத்தின் சூப்பர் பிராண்ட் தகுதியை கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actors Madhavan, Suresh Gopi, Sudeep and Allu Arjun have been appointed as the brand ambassadors of the jeweller Joy Alukkas. Except Maddy, the remaining three actors are new to this brand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X