அமெரிக்க அதிபராக 2வது முறையாகப் பதவியேற்றார் பராக் ஒபாமா

நேற்று நடந்த எளிமையான நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் ஒபாமாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு அவரது முதல் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற்று அவர் வெற்றிபெற்ற போதிலும் ஞாயிற்றுக்கிழமை மதியம்தான் அவரது இரண்டாம் பதவிக்காலம் தொடங்கியது.
மனைவி மிஷல் ஒபாமாவின் தந்தை அவருடைய தாயாருக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பரிசளித்த பைபிள் சாட்சியாக ஒபாமா பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
முன்னதாக, அமெரிக்கத் துணை அதிபராக ஜோ பிடன் வாஷிங்டனில் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். தலைநகர் வாஷிங்டனில் பிடனின் அதிகாரபூர்வ இல்லத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்ற துணை நீதிபதி சோனியா ஸோட்டாமேயர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர் ஜனவரி 20ம் தேதி பதவியேற்க வேண்டும் என்பது அங்குள்ள அரசியல்சாசனம் கூறுகிறது. எனவேதான் நேற்று ஒபாமா பதவியேற்றார். ஆனால்நேற்று அரசு விடுமுறை என்பதால் பெரிய அளவிலான விழா போல அது நடைபெறவில்லை. அதனால்தான் இன்று மீண்டும் பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சியில் ஒபாமா மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவுள்ளார்.
இதுபோன்று இரு முறை பதவியேற்கும் 7வது அதிபர் ஒபாமா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications