என் நண்பன், உண்மையான விசுவாசியாக இருந்த பொட்டு சுரேஷ்: மு.க. அழகிரி
Subscribe to Oneindia Tamil

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாக இருந்த பொட்டு சுரேஷை மர்ம நபர்கள் நேற்று வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பாக பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுகவினர் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்த மு.க. அழகிரி இன்று பகல் மதுரைக்கு சென்றார். பொட்டு சுரேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய நண்பனாக, உண்மையாக விசுவாசியாக இருந்தவர் பொட்டு சுரேஷ். பொட்டு சுரேஷை படுகொலை செய்த யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications