For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிட எதிர்ப்பு: மைசூரிலிருந்து பெங்களூருக்கு எதியூரப்பா நடைபயணம்

By Siva
Google Oneindia Tamil News

Yeddyurappa
பெங்களூர்: காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசு இதழில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முன்னாள் முதல்வரும், கர்நாடகா ஜனதா கட்சி தலைவருமான எதியூரப்பா நாளை பாதயாத்திரை செல்கிறார்.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசு இதழில் வெளியிட கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொரட்பாக நேற்று கர்நாடக சட்டசபையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசு இழதழில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முன்னாள் முதல்வரும், கர்நாடகா ஜனதா கட்சி தலைவருமான எதியூரப்பா மைசூரில் இருந்து பெங்களூருக்கு நாளை பாதயாத்திரை செல்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

இந்த பாதியாத்திரை அரசியல் சார்ந்தது அல்ல. இதில் கட்சி வித்தியாசமின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து போராடுபவர்கள் அதை உடனே செய்ய வேண்டும். அரசு இதழில் வெளியிட்டப்பிறகு போராடி என்ன பயன். காவிரி பிரச்சனை தொடர்பாக டெல்டா பகுதி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். காவிரி பிரச்சனையில் கர்நாடகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை இந்த பாதயாத்திரை மூலம் அனைவருக்கும் தெரிவிப்போம். பாதயாத்திரை வரும் 14ம் தேதி பெங்களூரில் முடியும் என்றார்.

English summary
Former Karnataka chief minister and KJP president Yeddyurappa told that he would launch a padayatra from Mysore to Bangalore tomorrow to show his protest against the final award of the Cauvery Water Disputes Tribunal being notification.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X