தூங்கிக் கொண்டிருந்த நர்ஸைக் கற்பழிக்க முயன்றவர் கைது
ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி பசுவந்தனை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த நர்சை பலத்காரம் செய்ய முயன்றதாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகேயுள்ள கப்பிகுளத்தை சேர்ந்த கருப்பசாமி மகள் ராமலெட்சுமி. இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
ராமலெட்சுமி அதிகாலை பணிமுடிந்து வந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த கண்டக்டர் வீரசிங்கம் மகன் சுரேஷ் குமார் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
அங்கு தூங்கி கொண்டிருந்த ராமலெட்சுமியை பலத்காரம் செய்ய முயன்றார். இதில் சுதாரித்து கொண்ட ராமலெட்சுமி சத்தம் போட்டார். இதனால் சுரேஷ்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்த பசுவந்தனை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது இரண்டு குடும்பத்தினரும் முன்னுக்கு பின் முரணாக தகவல் கொடுத்தனர். இதனால் கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் விசாரணைக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.
அங்கு இன்ஸ்பெக்டர் ஞானசுந்தரி விசாரணை நடத்தினார். இதில் பலத்கார முயற்சி நடந்ததை இரு தரப்பினரும் ஒத்து கொண்டனர். இந்த தகவலை இன்ஸ்பெக்டர் ஞான சுந்தரி பசுவந்தனை போலீசாருககு தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
சுரேஷ்குமார் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு ஒன்றில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளி வந்த நிலையில் இளம்பெண்ணை பலத்காரம் செய்ய முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications