சுட்டுக் கொல்லப்பட்ட பிஸ்டோரியஸ் காதலியின் கடைசி ஆசை என்ன தெரியுமா...?

ரீவா அளித்த கடைசிப் பேட்டி இதுதான். தி செளத் ஆப்பிரிக்கன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் டிவியின் டிராபிகா ஐலன்ட் டிரஷர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ரீவா அளித்த பேட்டியாகும் இது.
டிவியில் தான் அளித்த பேட்டியை மறக்காமல் அனைவரும் பாருங்கள் என்று தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் ஆசையாக கோரிக்கை வைத்திருந்தாராம் ரீவா. கடைசியில் இதுவே அவரது கடைசியாக மாறிப் போனதுதான் சோகமானது என்று கூறியுள்ளார் ரீவாவின் உறவினரான ஷரோன்.
இந்த நிகழ்ச்சியின்போது படு மகிழ்ச்சியாக காணப்பட்டார் ரீவா. சிரித்தபடியும், பறக்கும் முத்தங்களைக் கொடுத்தபடியும் அவர் உற்சாகமாக காணப்பட்டார். கடந்த ஆண்டு ஜமைக்காவில் வைத்து இந்த ஷோவை படமாக்கினர். நீச்சல் உடையில் காணப்பட்ட ரீவா, கடலில் நீச்சலடித்தும் மகிழ்ந்தார்.
29 வயதான மாடல் அழகியான ரீவா சட்டம் படித்தவர் ஆவார். காதலர் தினத்தன்று தனது காதலர் பி்ஸ்டோரியஸ் வீட்டுக்குப் போயிருந்தபோது பிஸ்டோரியஸே அவரை சுட்டுக் கொன்று விட்டார். தற்போது பிஸ்டோரியஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரீவா, தென் ஆப்பிரிக்காவில் பிரபலமான மாடல் அழகியாவார். பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார். ஆண்கள் பத்திரிகை அட்டைப் படமாக இடம் பெற்றுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications