For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதவி விலகும் போப் பெனடிக்டுக்கு மாதாமாதம் ரூ.1.81 லட்சம் பென்ஷன்

By Siva
Google Oneindia Tamil News

Pope Benedict XVI
வாடிகன்: உடல் நலக்குறைவு காரணமாக இந்த மாத இறுதியில் பதவி விலகும் போப் 16ம் பெனடிக்டுக்கு மாதாமாதம் ரூ. 181,236 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

உடல் நலக்குறைவு காரணமாக 16ம் பெனடிக்ட் போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி அவர் வரும் 28ம் தேதி பதவி விலகுகிறார். வரும் மார்ச் மாத இறுதிக்குள் புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்நிலையில் பதவி விலகிய பிறகு 16ம் பெனடிக்டுக்கு மாதாமாதம் ரூ.181,236 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் சில இத்தாலிய இணையதளங்களில் பெனடிக்ட் குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது பெனடிக்டின் தேவைகளுக்கு ஆட்களை வாடிகன் நிர்வாகமே அளிக்கும் நிலையில் அவர் இவ்வளவு பணத்தை எப்படி செலவு செய்யப் போகிறார் என்று இணையதளங்களில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே வாடிகனில் உள்ள பிரச்சனைகள், தீர்க்கப்படாத ஊழல்கள் குறித்து புதிய போப் ஆண்டவர் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

English summary
Pope Benedict XVI will receive a pension of Rs. 181,236(€2,500) a month after he abdicates his throne on february 28.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X