நாராயணசாமியை நடமாட விட மாட்டோம்.. ஆள் மாறாட்ட கல்யாணசுந்தரம் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதில் பேசிய கல்யாணசுந்தரம், யார் நினைத்தாலும் முதல்வர் ரங்கசாமியை ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் 3 அல்லது 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும். இதில் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள். இதனை யாராலும் தடுக்க முடியாது.
பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கொடி நிச்சயம் பறக்கும். மத்திய அரசின் அராஜக போக்கை புதுவை மக்களை வஞ்சிக்கும் நாராயணசாமியை எடுத்துக் காட்டத்தான் இந்த மாநாடு. நாராயணசாமி என்ன நினைத்தாலும் ரங்கசாமியை ஒன்றும் செய்ய முடியாது. என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் நினைத்தால் நாராயணசாமியால் புதுவையில் நடமாட முடியாது.
எத்தனை வழக்குகள் போட்டாலும் எங்களை அசைக்க முடியாது. ரங்கசாமிக்காக உயிரை தரவும் தயாராக உள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications