For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு: பிரதமர் உறுதி

By Siva
Google Oneindia Tamil News

Manmohan singh
டெல்லி: இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என தமிழக காங்கிரஸ் எம்பி.,க்களிடம் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

நேற்று மாலை ஹைதராபாத்தில் குண்டுவெடித்ததால் நாடே பரபரப்பாக உள்ளது. இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியவுடன் ஹைதராபாத் சம்பவம் தொடர்பாக எதிர்கட்சிகள் அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். இந்த பரபரப்பான சூழலில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து பேசினர்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நேற்று முன்தினம் அரசிதழில் வெளியிட்டப்பட்டதற்கு பிரதமரிடம் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

பிரதமர் உறுதி

இதனையடுத்து இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் பிரதமர் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

மேலும், காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

English summary
TN congress MPs met PM Manmohan Singh on friday and thanked him for notifying cauvery tribunal award. They requested him to support USA when it passes a resolution against the Sri Lankan government in the UN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X