44 வயதுப் சீனப் பெண்ணுக்கு ஆறே முக்கால் அடி தலை முடி!
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த சென் யிங்குவான் என்ற பெண்ணின் தலைமுடியைப் பார்த்து அந்த ஊரே அதிசயித்துக் கிடக்கிறதாம். காரணம், 44 வயதான இவருக்கு ஆறே முக்கால் அடி நீளத்துக்கு தலைமுடி இருப்பதால். இதை அவர் கோதுவதையும், தண்ணீரில் அலசுவதையும் ஊரே கூடி வேடிக்கை பார்க்குமாம்.
கடந்த 11 வருடமாக இவர் தலை முடியை வெட்டியதே இல்லையாம். இவருக்கு சிறு வயதிலிருந்தே முடி வளர்ந்தபடி உள்ளதாம்.
தனது தலைமுடிக்கு தான் அடிமை என்று பெருமையுடன் கூறுகிறார் சென். தலைமுடியைக் காதலிப்பதாகவும், அதை உயிராக நினைப்பதாகவும் அவர் சொல்கிறார்.

அத்தோடு நில்லாமல் முடி கீழே உதிர்ந்து விழுந்தால் அதையும் விடுவதில்லையாம். அதையும் எடுத்து சேகரித்து வைக்கிறாராம். ஒரு நாளைக்கு இப்படி உதிர்ந்து விழும் முடியின் அளவு 50 கிராம் அளவில் இருக்குமாம்.
இவரது தலைமுடியை நீரில் அலசி, உலர வைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகுமாம்.
சென்னின் உயரம் 5 அடியாகும். ஆனால் அவரை விட ஒன்றே முக்கால் அடி அதிகமாக அவரது தலைமுடி உள்ளது. நடந்து போனால் தரையைத் தழுவியபடி இவரது தலைமுடியும் வருமாம். இதனால் முடியைத் தூக்கிப் பிடித்து முடிந்து போட்டுக் கொண்டுதான் நடப்பாராம்.
கடந்த 11 வருடங்களாக இவர் தனது தலைமுடியை மிகவும் கவனமாக பராமரித்து வருகிறாராம். மேலும், உதிர்ந்து விழும் முடியையும் கூட சேகரித்துப் பத்திரமாக வைத்து வருகிறாராம்.
நான்கு நாட்களுக்கு ஒருமுறை இவர் தனது தலைமுடியை அலசிக் காயப்போடுகிறாராம். இவர் வெளியில் போனால் தலைமுடியை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடி விடுமாம்.
இப்படியும் விசித்திரம்...
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications