அமெரிக்காவில் எச்ஐவி பாதிப்புடன் பிறந்த குழந்தையை குணப்படுத்தி சாதனை
சிகாகோ: அமெரிக்காவில் எச்ஐவி பாதிப்புடன் பிறந்த பெண் குழந்தையை குணப்படுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் மிஸிஸிப்பியில், எச்ஐவி பாதிப்புடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு எச்ஐவி பாதிப்புக்குள்ளாவோருக்கு தரப்படும் மருந்துகளையே கொடுத்து அதை சரி செய்துள்ளனராம் டாக்டர்கள்.
எச்ஐவி பாதித்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தை எச்ஐவி பாதிப்புடன் இருக்கும் என்பதாலேயே உறவு கொள்வதையும், குழந்தை பெற்றுக் கொள்வதையும் தவிர்த்து விடுவார்கள்.
அதையும் மீறி சில சந்தர்ப்பங்களில் எச்ஐவி பாதிப்புடன் குழந்தைகள் பிறந்து விடுகின்றன. பிறக்கும் போதே சாவின் தேதியை நிர்ணயித்துக் கொண்டு பிறக்கும் குழந்தைகள் எந்த ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள். அவர்கள் உயிர்வாழவைப்பதற்கு பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அமெரிக்காவில் சாதனை
இந்த நிலையில் அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாகாணத்தில் எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தை குணப்படுத்தப்பட்ட சம்பவம் மருத்துவ உலகில் பெரும் வியப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

முற்றிலும் குணப்படுத்த முடியும்
இதுகுறித்து பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வைராலஜிஸ்ட் டாக்டர் தெபோரா பெர்சாத் கூறுகையில், குழந்தைகளில் காணப்படும் எச்ஐவி பாதிப்பை முற்றாக குணப்படுத்த முடியும் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது. இதில் மேலும் ஆய்வுகள் தொடரவுள்ளன என்றார்.

சோதனை ரீதியான சிகிச்சை
இது ஒரு சோதனை ரீதியான சிகிச்சைதான் என்று இதில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பல ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே இதுகுறித்த முடிவுக்கு வர முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிப்பின் அறிகுறி இல்லை
எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தை பிறந்த உடனேயே அதற்கு எச்ஐவி பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் சிகிச்சை தொடங்கியது. தற்போது கடந்த ஒரு வருடமாக இக்குழந்தைக்கு மருந்துகள் ஏதும் தரப்படவில்லை. எச்ஐவி பாதிப்பு முழுமையாக போய் விட்டதாக டாக்டர்கள் சொல்கின்றனர். பாதிப்பின் அறிகுறி எதுவும் இப்போது குழந்தையிடம் இல்லையாம்.

எச்ஐவி குழந்தைகளின் வாழ்வு
எச்ஐவி குணப்படுத்தப்பட்ட குழந்தைக்கு தற்போது இரண்டரை வயதாகிறது. தற்போது இதேபோல மற்ற குழந்தைகளிடமும் மருந்து கொடுத்து சிகிச்சை செய்யப் போகிறார்களாம். அதிலும் சாதகமான முடிவு வந்தால் எச்ஐவி பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் வாழ்வு பிரகாசமாகும் என்பதில் சந்தேகமில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications