அஜ்மானில் 61 கிலோ கேக் வெட்டி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

அஜ்மான்: அஜ்மானில் உள்ள அமீரக தமிழர்கள் அமைப்பு சார்பில் திமுக பொருளாளர் முக ஸ்டாலினின் 61வது பிறந்தநாள் 61 கிலோ கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திமுக பொருளாளர் முக ஸ்டாலினின் 61வது பிறந்தநாள் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாள் அஜ்மானிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

முனைவர் திரு. அஜ்மான் மூர்த்தி அவர்களின் அமீரக தமிழர்கள் அமைப்பு அஜ்மானில் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. மார்ச் 1ம் தேதி அஜ்மான் இந்திய சங்க வளாகத்தில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

காலையில் இலவச மருத்துவ முகாம்

காலையில் இலவச மருத்துவ முகாம்

அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ முகாம் காலை 8.30 மணிக்கு திரு அஜ்மான் மூர்த்தி அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. அஜ்மான் இந்திய சங்க தலைவர் ஜனாப். அஹமது கான் மற்றும் மெட்ரோ மெடிக்கல் சென்டர் உரிமையாளர் திரு. ஜமால் அபூபக்கர் அவர்கள் விழாவுக்கு தலைமை தாங்கினார்கள். சிவ் ஸ்டார் பவன் உரிமையாளர் திரு. கோவிந்தராஜன், திரு மதியழகன், திரு. செந்தில் குமார், திரு சைபுதீன், திரு. சுரேஷ், திரு ச. ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திரு. ஜமால் அபூபக்கர் மருத்துவ முகாமின் முக்கியத்துவம் பற்றி பகிர்ந்து கொண்டார். மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் பெருவாரியான தமிழ் மக்கள், மருத்துவர்களின் சிறந்த ஆலோசனைக‌ளைப் பெற்று பயன்பெற்றனர். முகாமில் பங்கேற்ற தமிழ் மக்களுக்கு பழரசம் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

மாலையில் கோலாகல கொண்டாட்டம்

மாலையில் கோலாகல கொண்டாட்டம்

மாலை 6.00 மணிக்கு ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழ் தாய் வாழ்த்துடன் கோலாகலமாகத் தொடங்கின, இந்திய சங்க தலைவர் ஜனாப் அஹமது கான் வரவேற்புரை வழங்கினார், அதனை தொடர்ந்து அமீரக தமிழர்கள் அமைப்பு அஜ்மான் நிறுவனர் முனைவர் திரு அஜ்மான் மூர்த்தி அவர்கள் நிகழ்வுரை வழங்கினார். அவர் திமுக பொருளாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு கடந்த மாதம் துபாயில் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்த முப்பெரும் விழாவின் சிறப்புகளை பகிர்ந்து கொண்டார்.

மெட்ரோ மெடிக்கல் சென்டர் உரிமையாளர் திரு. ஜமால் அபூபக்கர், பாத்திமா குரூப் உரிமையாளர் திரு. சேய்க் முகமது, மெட்ரோ மெடிக்கல் சென்டர் திருமதி சித்ரா சம்சுதீன், கவிஞர் திரு. ஜின்னா ஷரீபுதீன், அமீர‌க‌ காயிதே மில்ல‌த் பேர‌வை த‌லைவ‌ர் திரு. லியாகத் அலி, சிவ் ஸ்டார் பவன் உரிமையாளர் திரு. கோவிந்தராஜன் ஆகியோர் ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துரை வழ‌ங்கினர். அபுதாபி தமிழ் சங்கம் திரு. ரெஜினால்ட் அவர்கள் வாழ்த்துரை வழங்கியதோடு, ஸ்டாலின் அவர்களிடம் திரு. அஜ்மான் மூர்த்தி அவர்களின் அமீரக தமிழர்களுககான சேவைகளை பற்றி பகிர்ந்து கொண்டதை நினைவு கூர்ந்தார்.

61 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

61 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

61வது பிறந்தநாளையொட்டி 61 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்பட்டது. "6" "1" என வடிவமைக்கப்பட்டு இருந்த கேக் மிகவும் பிரமாண்டமாக காணப்பட்டது.

அஜ்மான் மூர்த்திக்கு சிறப்பு விருது

அஜ்மான் மூர்த்திக்கு சிறப்பு விருது

நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய கலையன்பன், திரு. அஜ்மான் மூர்த்தி அவர்களின் 30 ஆண்டுகால அயராத தமிழர்களுக்கான சேவையை பாராட்டியும், திரு.ஸ்டாலின் அவர்களை கொண்டு சிறப்பாக முப்பெரும் விழாவை நடத்தியதை பாராட்டியும், முதன்முதலாக அமீரகத்தில் இதுவரை யாரும் நடத்திடாத ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை மிகவும் சிறப்பாக நடத்துவதை பாராட்டும் வண்ணமாக திரு அஜ்மான் மூர்த்தி அவர்களுக்கு "அமீரக தமிழ் மகுடம்" என்ற சிறப்பு விருதினையும் வழங்கி கௌரவித்தனர். அதனைத் தொடர்ந்து திரு. ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துரைகள், வாழ்த்துப்பாடல்கள் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை மிகவும் சிறப்பாக நள்ளிரவு 12 மணிவரை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. லத்திஃப் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு கொண்டாட்டங்களை தொடர்ந்து திரு.கோவிந்தராஜன் ஏற்பாடு செய்திருந்த சுவையான இரவு உணவும் வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+