வீடியோ கான்பரன்ஸிங் மூலம் யு.எஸ் வாழ் இந்தியர்களுடன் பேசும் மோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Narendra Modi
பெங்களூர்: சிகாகோ மற்றும் நியூஜெர்சியில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களை வீடியோ கான்பரன்ஸிங் முறை மூலம் சந்திக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா கொடுப்பதில்லை என்பதில் அமெரிக்கா தீர்மானமாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சிகாகோ மற்றும் நியூஜெர்சி ஆகிய இடங்களில் வைத்து வீடியோ கான்பரன்ஸிங் மூலம் சந்தித்து பேசவிருக்கிறார் மோடி. பாஜவின் வெளிநாட்டு நண்பர்கள் என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

வரும் 10ம் தேதி காலை இந்திய நேரப்படி 6.30 மணிக்கு மோடி அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் உரையாடுகிறார். சிகாகோவில் உள்ள ஹாலிடே இன் மற்றும் நியூ ஜெர்சியில் உள்ள டிவி ஏசியா அரங்கிலும் வரும் 9ம் தேதி இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் இந்தியர்கள் டிவி ஏசியாவில் கண்டு களிக்கலாம்.

மோடி ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டில் 12 அமெரிக்க நகரங்களில் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் இந்தியர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Shri Narendra Modi will address the Indian diaspora on 10th March 2013 in a event organized by the Overseas Friends of BJP in Chicago and New Jersey via video conferencing
Please Wait while comments are loading...