தென் மாவட்டங்களை கலக்கிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் 4 பேர் மதுரையில் கைது
மதுரை: மதுரையில் தென் மாவட்டங்களை கலக்கிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, நாகமலை புதுக்கோட்டை, ஒத்தக்கடை, நிலக்கோட்டை உள்பட தென்மாவட்டங்களான திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட பல இடங்களில் கடந்த 4 ஆண்டுகளாக வங்கிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் போலி கார்டுகள் மூலமாக பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது.
இது குறித்து மதுரை மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் ஆலோசனையின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் மதுரை பாசிங்காபுரத்தைச் சேர்ந்த திருமலைபாபு (37) என்பவரும், விளாங்குடியைச் சேர்ந்த பாலமுருகன்(28) என்பவரும் போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்த போது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அதன் பிறகு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆரப்பாளையத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்ற ஆபிரகாம் (29), பாசிங்காபுரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications