இலங்கையில் சீனா.. இந்தியா அச்சப்படக் கூடாது: தயாநிதி மாறன்
Subscribe to Oneindia Tamil

லோக்சபாவில் இன்றைய சிறப்பு விவாதத்தின் போது பேசிய தயாநிதி மாறன், இலங்கையில் இறுதிப் போரின் போது பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்று சில இடங்களை அறிவித்து அங்கு பொதுமக்களை வரவழைத்தனர். பல்லாயிரக்கணக்கில் அங்கு திரண்ட பொதுமக்களை குண்டுகளை வீசி படுகொலை செய்தது.
1986-ல் யாழ்ப்பாணத்தின் மீது இந்தியா உணவுப் பொட்டலங்களை வீசியது. அப்போது ஒரு இந்தியனாக நான் பெருமைப்பட்டேன். இந்தியாவால் எப்படிப்பட்ட உறுதியான முடிவையும் மேற்கொள்ள முடியும் என்பதை அப்போது அது வெளிப்படுத்தியது. ஆனால் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருப்பதால் இந்தியா அச்சப்படுகிறது. நாமும் கூடத்தான் மிகப் பெரிய நாடு. நாமும் வல்லமை படைத்த நாடுதான். நமது நாட்டை நம்மால் பாதுகாக்க முடியுமே.. நாங்கள் உங்களைத்தான் எதிர்பார்க்கிறோம்.. உங்களைத்தான் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications