அமெரிக்கர்கள் மனதைக் கவர்ந்த நாடுகள்... 6வது இடத்தில் இந்தியா!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கர்களின் மனதை அதிகம் கவர்ந்த நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. அதேசமயம், அதிகம் வெறுக்கும் நாடுகள் வரிசையில், பாகிஸ்தானுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட கேலப் சர்வேயில்தான் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த கருத்துக் கணிப்பில் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக, ஏன் அமெரிக்கர்களின் இதயத்தில் அமர்ந்துள்ள இஸ்ரேலுக்கு 7வது இடம்தான் கிடைத்துள்ளது என்பது ஆச்சரியமானது.

கனடாதான் பர்ஸ்ட்

கனடாதான் பர்ஸ்ட்

அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் நாடுகளில் முதலிடத்தில் அண்டை நாடான கனடாதான் முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டுக்கு 92 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2வது இடம் இங்கிலாந்துக்கு

2வது இடம் இங்கிலாந்துக்கு

இங்கிலாந்துக்கு இதில் 2வது இடமும், ஜப்பானுக்கு 3வது இடமும், ஜெர்மனிக்கு 4வது இடமும், பிரான்ஸுக்கு 5வது இடமும் கிடைத்துள்ளன.

6வது இடத்தில் இந்தியா

6வது இடத்தில் இந்தியா

அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 6வகது இடம் கிடைத்துள்ளது. 68 சதவீதம் பேர் இந்தியாவை விரும்புவதாக கூறியுள்ளனர்.

23 சதவீதம் பேருக்கு இந்தியாவைப் பிடிக்கவில்லை

23 சதவீதம் பேருக்கு இந்தியாவைப் பிடிக்கவில்லை

அமெரிக்கர்களில் 23 சதவீதம் பேருக்கு இந்தியாவைப் பிடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது இந்தக் கருத்துக் கணிப்பில்.

இஸ்ரேலுக்கு இந்தியா பரவாயில்லை

இஸ்ரேலுக்கு இந்தியா பரவாயில்லை

அமெரிக்காவின் மிகவும் நெருங்கிய நட்பு நாடு இஸ்ரேல் மட்டுமே. இஸ்ரேலை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது அமெரிக்கா மட்டுமே. ஆனால் அமெரிக்கர்கள் மனதில் இஸ்ரேலுக்கு 7வது இடம்தான் கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவுக்கு அடுத்த இடத்தில்தான் இஸ்ரேலை வைத்துள்ளனர் அமெரிக்கர்கள். இது ஆச்சரியம் தருகிறது...

ரஷ்யாவுக்கு 8வது இடம்

ரஷ்யாவுக்கு 8வது இடம்

பரவாயில்லை, டாப் 10 நாடுகளில் ரஷ்யாவுக்கு இடம் கொடுத்துள்ளனர் அமெரிக்கர்கள். இதுவும் ஆச்சரியமான ஒன்றுதான். அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருகாலத்தில் பரம வைரிகள் என்பது நினைவிருக்கலாம். ஆனால் இஸ்ரேலுக்கு அடுத்த இடத்தை ரஷ்யாவுக்குக் கொடுத்துள்ளனர் அமெரிக்கர்கள்.

9வது இடத்தில் சீனா

9வது இடத்தில் சீனா

சீனாவை 9வது இடத்தில் வைத்துள்ளனர் அமெரிக்கர்கள். இந்தியாவை விட 3 இடங்கள் பின்தங்கி சீனா இருப்பது இந்தியர்களுக்கு சந்தோஷமான விஷயம்தான்.

19வது இடத்தில் பாகிஸ்தான்

19வது இடத்தில் பாகிஸ்தான்

இந்தியாவின் பரம வைரியான பாகிஸ்தானை அமெரிக்கர்கள் ரொம்ப தூரத்தில் வைத்துள்ளனர். அதாவது 19வது நாடாக பாகிஸ்தான் இருக்கிறது.

அதிகம் வெறுக்கும் நாடுகளில் 3வது இடம் பாக்.குக்கு

அதிகம் வெறுக்கும் நாடுகளில் 3வது இடம் பாக்.குக்கு

அதேசமயம், அதிகம் வெறுக்கும் நாடுகள் வரிசையில் பாகி்ஸ்தானுக்கு 3வது இடத்தைக் கொடுத்துள்ளனர் அமெரிக்கர்கள். சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 10 பேரில் எட்டு பேருக்கு பாகிஸ்தானைப் பிடிக்கவில்லையாம். 81 சதவீதம் பேர் பாகிஸ்தானைப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

முதலிடத்தில் ஈரான் - 2வது இடத்தில் வட கொரியா

முதலிடத்தில் ஈரான் - 2வது இடத்தில் வட கொரியா

அமெரிக்கர்கள் அதிகம் வெறுக்கும் நாடுகள் வரிசையில் எதிர்பார்த்தது போல ஈரான்தான் முதலிடத்தில் உள்ளது. 2வது இடம் வட கொரியாவுக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+